27.8 C
Jaffna
January 23, 2025
Pagetamil
கிழக்கு

முழுமையான அதிகாரங்களுடன் மாகாணசபைகள் இயங்குவதை இந்தியா உறுதிசெய்ய வேண்டும்!

மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது. மாகாண ஆட்சி முறைமையை கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது காணி அதிகாரம், நிதி அதிகாரம், பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. அதை இந்தியா செய்யும் என எதிர்பார்க்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று மாலை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் துறை இராணுவத்துறை ஆகியவற்றில் தமிழ் மக்களை அல்லது தமிழ் பேசும் மக்களை இணைக்கின்ற விடயத்தில் மிகத் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. 1987 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 ஆம் ஆண்டு மாகாண சபை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாகாணசபை ஆட்சி முறையின் கீழ் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். காணி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில் காணி அதிகாரத்தை எல்லாம் கொண்டு வந்து மத்திய அரசாங்கத்தில் எல்லாவற்றையும் வைத்து இருக்கிறார்கள்.

வனவிலங்கு பகுதி, வனபரிபாலன பகுதி, மகாவலி பகுதி, தொல்பொருள் பகுதி என்று மத்திய அரசுக்கு கீழே காணிகளை கொண்டு செல்கிறார்கள். அது அவ்வாறு இருக்க மறுபக்கம் பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கு கிழக்கு மக்கள் பொலிஸாராக நியமிக்கப்பட வேண்டும். மாகாணத்திற்கு கீழே இது வரும். அதனை இல்லாமல் செய்வதற்கு தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பொலிஸில் சேர்த்துக் கொண்டால் எதிர்காலத்தில் இந்த மாகாண முறையை இல்லாமல் செய்துவிடலாம் .

போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டியது இல்லை. அது கேள்விக்கு உட்படுத்தப்படும் போது தமிழர்கள் பொலிஸிலும் இராணுவத்திலும் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆகவே அது தேவை இல்லை. அதாவது பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம் வழங்கத் தேவையில்லை என்று கொண்டு வரலாம்.

இந்த நடவடிக்கைக்கு இந்த அரசாங்கம் மாகாண சபை ஆட்சி முறையில் இருக்கின்ற சில அதிகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது இப்பிரிவுகளுக்கு இணைத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர இது ஐக்கிய நாடுகளுக்காக செய்யப்படும் நடவடிக்கை அல்ல. இந் நடவடிக்கையானது இந்த அரசாங்கம் மாகாண ஆட்சி முறையை இல்லாமல் செய்ய வேண்டும் அல்லது இந்த ஆட்சி முறையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். 9 மாகாணமாக இருப்பது சில வேளை 5 மாகாணமாக மாறலாம். சில வேளைகளில் பழைய காலங்களில் இருந்ததை போன்று ராஜரட்டை, ருகுணுரட்டை என மூன்று பிரிவாக வரலாம் என்ற முறைமையினையும் சிந்திக்கின்றார்கள்.

மாகாண ஆட்சி முறைமை தேவையில்லை என சில கட்டத்தில் சிந்திக்கின்றார்கள். மத்திய அரசின் ஆட்சி முறைமை இருக்கட்டும்.பிரதேச சபை மாநகர சபை நகர சபையினை பலப்படுத்தி விடுவோம் என நினைக்கின்றார்கள். ஆகவே இந்த அதிகாரங்களை பறிப்பதற்காக தான் பொலிஸ் இராணுவ அதிகாரங்களை கொண்டு வருகிறார்கள். ஆனாலும் இது செல்லுபடி ஏற்றதாக மாறும். ஏனெனில் இந்த மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதில் நாங்கள் மிக அவசியமாக இருக்கின்றோம்.

இது சர்வதேச ரீதியாக தீர்க்கப்பட்ட விடயம். இலங்கை மாத்திரமல்ல இலங்கையும் இந்தியாவும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். சர்வதேச ஒப்பந்தம். இது தனி ஒரு நாட்டின் ஒப்பந்தம் அல்ல. சர்வதேச ஒப்பந்தமாகும். இந்தியாவும் இலங்கையும் செய்த கொண்டது தான் இந்த ஒப்பந்தம். இந்த மாகாண ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கு இந்தியாவிற்கு கடமை இருக்கிறது. மாகாண ஆட்சி முறைமையை கொண்டு வருவதோடு மாத்திரமல்லாது காணி அதிகாரம் நிதி அதிகாரம் பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. அதை இந்தியா செய்யும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பொலிஸ் நிலையத்தை மீட்ட குகதாசன்

east tamil

வெள்ளத்தில் மூழ்கிய திருகோணமலை பாலம்பட்டாறு பத்தினி அம்மன் ஆலயம்

east tamil

நிலாவெளி வைத்தியசாலையில் பறிபோன உயிர்; வைத்தியசாலையின் அசமந்தம்

east tamil

அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி தலைமறைவு

east tamil

மூதூரில் வெள்ள நீருக்கு எதிரான போராட்டம்

east tamil

Leave a Comment