மஸ்கெலியாவை சேர்ந்த ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
51 வயதான ஒருவர் திடீர் சுகவீனமடைந்த நிலையில், மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில், அவருக்கு தொற்று உறுதியானது.
இதையடுத்து அவருடன் நெருங்கி பழகிய 9 பேருக்கும், குடும்பத்தினர் 6 பேருக்கும் நேற்று மதியம் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்னும் 62 பேருக்கு எதிர்வரும் சனிக்கிழமை பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1