Pagetamil
இலங்கை

இலங்கையில் நில அளவைக்கு தென்கொரிய நிறுவனம்!

கொரியாவிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊடாக இரகசியமாக நாட்டில் நில அளவீட்டு திட்டத்தை தொடங்க அரசாங்கம் தயாராகி வருவதாக அரச அளவையாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

சங்கத்தின் தலைவர் துமிந்த பண்டார, மாத்தளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசுகையில், முன்னாள் அரசாங்கம் இந்த திட்டத்தை ஒரு அமெரிக்க நிறுவனத்துடன் செயல்படுத்த முயன்றது, திட்டத்தின் நோக்கம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று கூறினார்.

இது தொடர்பான ஆவணம் 2019 ஒக்டோபர் 31 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டதாக பண்டார கூறினார்.

தொடர்புடைய நடவடிக்கைகள் இரகசியமாக எடுக்கப்படுவதாக அவர் கவலை தெரிவித்தார். திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று குறிப்பிட்டார்.

காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறினார்.

இது நில அளவீட்டுத் திட்டம் அல்ல, தென் கொரியாவின் உதவியுடன் இலங்கை அளவிடும் கருவிகளைப் பெற உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய வானிலை

Pagetamil

இயக்கத்துக்கு பயந்து உயர் நீதிமன்றம் சென்ற மஹிந்த!

Pagetamil

தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை சாத்தியமா?

Pagetamil

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

Leave a Comment