2020 க.பொ.த. சாதாரண தர பரீட்சை இன்று (10) முடிவுக்கு வருகிறது.
மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பித்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 4,513 மையங்களில் 622,352 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
பரீட்சை முடிந்ததைத் தொடர்ந்து பரீட்சை மையங்களில் அல்லது பரீட்சை மையங்களுக்கு அருகில் வன்முறையாக அல்லது கட்டுக்கடங்காமல் நடந்து கொள்ளும் மாணவர்களின் முடிவுகள் இரத்து செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில், 1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொது பரீட்சைகள் சட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பொதுச் சொத்தை சேதப்படுத்தினால், கடுமையான தண்டனைகளை அறிவிக்க முடியும் என்று திணைக்களம் கூறியது.
அதன்படி, தேர்வு முடிந்ததும் அமைதியாக கலைந்து செல்லுமாறு மாணவர்கள் கோரப்பட்டுள்ளனர்.
கடுமையான நடவடிக்கை எடுக்க பரீட்சை மையங்களின் மேற்பார்வையாளர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பரீட்சை மையங்களில் எந்தவொரு கட்டுக்கடங்காத நடத்தையையும் கட்டுப்படுத்த காவல்துறையின் உதவியையும் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்குப் பிறகு கூட்டங்களாக கூடாமல் மாணவர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி பரீட்சை முடிவில் ஒன்றுகூடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதன்படி, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கோரி சனத் புஜித இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிற்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.