27.4 C
Jaffna
December 15, 2024
Pagetamil
சினிமா

அப்பா வயது சூர்யாவை திருமணம் செய்ய ஆசைப்படும் 17 வயது சீரியல் நடிகை!

விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தில் நடித்தவர் ரவீணா தாஹா. 17 வயதாகும் அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் 2 சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்ஸ்டகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார்.

அவ்வப்போது தன் புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டகிராமில் போஸ்ட் செய்து வருகிறார் ரவீணா. அதற்கு லைக்ஸுகளும் வந்து குவிகிறது. இந்நிலையில் யூடியூப் சனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். தற்போது எல்லாம் யூடியூப் சனல் பேட்டிகளில் பிரபலங்களிடம் வில்லங்கமான கேள்விகளை கேட்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் சின்னப் பிள்ளையான ரவீணாவிடம் போய் மரி மீ, கிஸ் மீ என்று யாரிடம் சொல்வீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரவீணாவோ சூர்யாவை பார்த்து மரி மீ என்று சொல்வேன், அஜித்திடம் கிஸ் மீ என்பேன் என பதில் அளித்துள்ளார்.

அப்பா வயது நடிகர்களிடம் போய் சொல்லும் வார்த்தைகளா இது என்று அந்த பேட்டியை பார்த்தவர்கள் ரவீணாவை விளாசுகிறார்கள். மேலும் மைனரை பேட்டி எடுக்கும்போது இப்படி எல்லாம் கேள்வி கேட்டிருக்கக் கூடாது. அதனால் ரவீணாவை குறை சொல்லியும் தவறு இல்லை என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலரோ, இது எல்லாம் சிறுசுலயே வீணாப் போகிறது என்று ரவீணாவை விமர்சித்துள்ளனர். சின்னப் பொண்ணு, அதற்கு என்ன தெரியும், ஏதோ கேள்வி கேட்க டக்குனு பதில் சொல்லிடுச்சு என ரவீணாவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுகிறது.

What’s your Reaction?
+1
1
+1
2
+1
1
+1
0
+1
1
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: விஜய் பட நாயகி விளக்கம்!

Pagetamil

இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Pagetamil

Leave a Comment