ரஞ்சனின் செல்பியால் அரசு கொதிப்பு!

Date:

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவுடன் செல்பி புகைப்படம் எடுத்து, நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா மீறியுள்ளதாக பெரமுன கட்சி கொதித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நேற்று அங்குணபொலபெலெச சிறைச்சாலைக்கு சென்று, ரஞ்சன் ராமநாயக்க எம்.பியை சந்தித்து பேசினார். இதன்போது, அவருடன் செல்பி படமும் எடுத்துக் கொண்டார். அதை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சிறைச்சாலைகள் சீர்திருத்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஹர்ஷன ராஜகருணா தனது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறியுள்ளதாகவும், இது குறித்து இன்று சபாநாயகரிடம் நாடாளுமன்றத்தில் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்