இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பணியாளர் கார்ணியா பிரான்சிஸ் தவறான முறைப்பாடு அளித்ததாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2019 ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் என்ற குற்றச்சாட்டை சுமத்தியமைக்காகவே, சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியா பிரான்சிஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டன.
தவறான அறிக்கை வழங்கியது, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதன்போது, வழக்கு ஜூன் 4 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் கார்னியா பிரான்சிஸ், இனம் தெரியாத குழுவினரால் தான் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து, சிஐடியால் 2019 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். விளக்கமறியலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.