அதிவேக ரீசார்ஜ் தொழில் நுட்பங்களில் நிபுணத்துவம் கொண்ட இஸ்ரேலைச் சேர்ந்த ஸ்டோர்டொட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல் தலைமுறை லித்தியம் அயன் பற்றரியை உருவாக்கியுள்ளது.
இந்த பற்றரி முழுவதுமாக சார்ஜ் ஆக 5 நிமிடங்களே ஆகும் என்கிறார் நிறுவனத்தின் நிறுவனர் டோரன் மயர்ஸ்டார்ஃப்.
மேலும் அவர் கூறும்போது, “இந்த அதிவேக பற்றரி தொழில்நுட்பமானது எலெக்ட்ரிக் வாகன ஓட்டுநரின் அனுபவத்தையே தலைகீழாக மாற்றக்கூடியது. நெடுந்தூரப் பயணங்களில் உள்ள சார்ஜ் ஏற்றும் கவலையை முற்றிலுமாக நீக்கிவிடுகிறது. சார்ஜ் செய்ய சில மணி நேரங்கள் ஆகும் என்ற நிலையை இந்த பற்றரி மாற்றிவிடும்’’ என்கிறார்.
இதற்காக பல்வேறு பரி சோதனைகளை இந்நிறுவனம் செய்துள்ளது. இந்நிறுவனம் மொபைல், ட்ரோன், ஸ்கூட்டர் களுக்கு பற்றரிகளை உற்பத்தி செய்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1