பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்று 8ஆம் திகதி, திங்கள் கிழமை மாலை வவுனியா – பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்துக்கு முதல்வர் அலுவலகத்துக்கு விஜயம் செய்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் வளாக முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின் அங்கிருந்து பம்பைமடுவில் அமைந்துள்ள பீடங்களுக்கு நேரில் சென்று நிலமைகளைப் பார்வையிட்டார்.
இன்று செவ்வாய்க்கிழமை காலை வளாகத்தில் துணைவேந்தர், பதிவாளர், வளாக முதல்வர் உட்பட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம், வளாக முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன், பதிவாளர், பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், அலுவலர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.