நேற்று 344 பேருக்கு தொற்று!

Date:

நேற்று 344 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  86,039 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில்  312 பேர் மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 22 தொ்ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று 334 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, மினுவாங்கொட- பேலியகொட கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 81,764 ஆக அதிகரித்துள்ளது.

அண்மையில்  வெளிநாட்டிலிருந்து வந்த 10 நபர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 3,019 பேர்  சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, கொரோனாவிலிருந்து குணமடைந்த 454 பேர் வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,513 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 424 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன்

🕊️ காலஞ்சென்ற திருமதி பத்மதேவி தேவாராஜன் 11.08.2026 | அவுஸ்திரேலியா திருமதி பத்மதேவி தேவாராஜன்...

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்