படுகொலை செய்யப்பட்ட பல்கலகழக மாணவர்கள் நினைவாக நிதியம்!

Date:

21.10.2016 ஆம் ஆண்டு பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸன், ந.கஜன் ஆகியோரில் சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.

சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்ஸன், கஜன் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டு நினைவுச்சுடரினை ஏற்றி வைத்தார்.

இதன்போது முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேச சபை தலைவர் க.தர்ஷன், சாவகச்சேரி முன்னாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் சுலக்ஸனின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஸன், கஜன் ஆகியோரின் நினைவாக கல்வி ஊக்குவிப்பு நிதியம் ஆரம்பிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வைப்பிலிடப்பட்டு வங்கி கணக்கு புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்