சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மன்னாரில் இடம் பெற்ற கவனயீர்ப்பு பேரணி

Date:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சமூக ரீதியில் பெண்கள் கொண்டிருக்கும் பொறுப்பு வாய்ந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் முகமாக மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் விசேட கவனயீர்ப்பு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு மன்னாரில் இடம் பெற்றது.

விழிர்ப்புணர்வுக்கு என பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட ஊர்தியில் சமூகத்தில் பெண்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் பொறுப்புக்களை ஒப்பனை செய்தவாறும் பெண்கள் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் பேரணியாக மன்னார் நகரப்பகுதியை வந்தடைந்த குழுவினர் விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

குறிப்பாக பெண்கள் சார்ந்த சட்டங்கள் மற்றும் பெண்மையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் விநியோகித்ததுடன் பொது இடங்கள் மற்றும் பேருந்துகளிலும் காட்சிப்படுத்தினர்.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தினர் இளைஞர் யுவதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்