வவுனியாவில் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 7பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ்நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி காமினி திசாநாயக்க தெரிவித்தார்.
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினரால் நகரப்பகுதிகளில் நேற்று விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துதல், மற்றும் வீதி ஒழுங்குகளை பேணாமல் வாகனம் செலுத்துபவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அந்தவகையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 பேர்பொலிசாரால்கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1