26.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

கோப்பாய் சிகிச்சை மையத்திலிருந்து நேற்று வீடு திரும்பிய மூதாட்டி இன்று மரணம்: பருத்தித்துறையில் சம்பவம்!

யாழ்.கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 75 வயதான பெண் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பருத்துறை தும்பளை பகுதியில் நடன ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.

இதனையடுத்து அவருடைய குடும்பத்தவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இவ்வாறு தொற்றுக்குள்ளான நடன ஆசிரியையின் தாயார்

கோப்பாய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றார். அவருக்கு அறிகுறிகள் தென்படாததையடுத்து, 10 நாள் சிகிச்சையின் பின்னர் நேற்று வீடு திரும்பினார்.

நாளை வரை அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் சுகாதார பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் கண்காணிப்பிற்காக அவருடைய வீட்டுக்கு சென்றிருந்த நிலையில்

திடீர் சுகயீனமடைந்திருப்பதாக உறவினர்கள் சுகாதார பரிசோதகருக்கு கூறியிருக்கின்றனர். இதனையடுத்து உடனடியாக 1990 அம்புலன்ஸ் மூலம்

பருத்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை அவருக்கு இன்று மீண்டும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் சிகிச்சை நிலையத்திலிருந்து திரும்பியவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும். அந்த 2 வாரத்திற்குள் ஏற்பட்டிருக்கும் இறப்பு கொரோனா இறப்பாக கருதப்பட முடியும் என சுகாதார பிரிவினர் கூறியுள்ளனர்.

ஆனாலும் பீ.சி.ஆர் பரிசோதனைகளின் பின்பே மாகாண சுகாதார அமைச்சு அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என கூறப்படுகின்றது.

எனினும் கொரோனா மரணமாக கருதப்பட்டு கொவிட் -19 விதிகளுக்கமைய இறுதி சடங்கிற்கான ஒழுங்குகளை சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment