ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான திருத்தப்பட்ட தீர்மானத்தை, அனுசரணை நாடுகள் இன்று சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியம், கனடா, ஜெர்மனி, மொண்டினீக்ரோ, மலாவி மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த தீர்மானத்தின் இறுக்கமான பகுதிகள் நீக்கப்பட்டு, உப்புச்சப்பற்ற வரைபை சமர்ப்பிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அந்த தீர்மானத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 கட்சிகளின் தலைவர்களின் பெயருடனும், இரா.சம்பந்தன் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையை 3 தலைவர்களும் அறிந்திருக்கவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1