25.5 C
Jaffna
January 13, 2025
Pagetamil
இலங்கை

இலங்கை இராணுவம் கொள்வனவு செய்த அதிநவீன ஆயுதம்!

இலங்கையில் அதிமுக்கிய பிரமுகர்கள் மற்றும் இலக்குகளை பாதுகாக்கும் படையணிகளில் ட்ரோன் ஜாமர் சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஆளில்லாத பறப்பு சாதனங்கள் UAV (UNMAND ARIAL VEHICLE) உலகளவில் பெருகி வரும் நிலையில், இந்த நடவடிக்கையில் இலங்கையும் இறங்கியுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆளில்லாத விண்ணில் பறக்கும் விமானங்கள் மற்றும் சாதனங்களின் பாதையை மாற்றவோ அல்லது அதை வானத்தில் வைத்திருக்கவோ கூடிய சாதனம் ட்ரோன் ஜாம்மர் என்று அழைக்கப்படுகிறது.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ட்ரோன்கள் ஏராளமாக உள்ளன. உலகின் முன்னணி ட்ரோன்கள் தயாரிப்பாளராக சீனாவும், ட்ரோன் ஜாமர்களை தயாரிக்கும் உலகின் முன்னணி உற்பத்தியாளராக சீனாவும் விளங்குகின்றன. இலங்கையில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் பல்வேறு விதமான ட்ரோன்களை வாங்க முடியும். மிகச்சிறியளவிலான விளையாட்டு ட்ரோக்கள் தொடங்கி, படப்பிடிப்பிற்கு உதவும் ட்ரோன்கள் வரை கொள்வனவு செய்யலாம்.

நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு அளப்பரியது.

2018 ஓகஸ்ட் 4ஆம் திகதி வெனிசூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரா மீது இரண்டு சிறிய ட்ரோன் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது. தலைநகர் கராகஸில் நடந்த இராணுவ அணிவகுப்பில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது வானில் பறந்து வந்த ஒரு ட்ரோன் வெடித்து சிதறியது. உடனடியாக ஜனாதிபதி பாதுகாப்பாக அகற்றப்பட்டார். இரண்டு நிமிட இடைவெளியில் மற்ற ட்ரோன் வெடித்தது. தொழில்நுட்ப சிக்கல்களால் ஜனாதிபதி கொலை முயற்சி வெற்றியளிக்கவில்லை.

இதன்மூலம், நவீன உலகில் ட்ரோன்களின் அபாயத்தை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

இதனால் இலங்கை முன்கூட்டியே ட்ரோன் ஜாமர்களை கொள்வனவு செய்துள்ளது. சமீபத்தில் சீனாவிலிருந்து ட்ரோன் ஜாமர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டிஜிட்டல் ஈகிள் நிறுவனத்தின் ட்ரோன் ஜாமர்களே கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிறுவனம் 2013 இல் நிறுவப்பட்டது. ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் ஜாமர்களை தயாரிப்பதில் நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது.

பொதுவாகவே விமான எதிர்ப்பு ஏவுகணையை தயாரிக்கும் நிறுவனமே, ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறையையும் தயாரிக்கும். துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனமே, குண்டு துளைக்காத ஆடைகளை தயாரிக்கும். இப்படித்தான் டிஜிட்டல் ஈகிள் நிறுவனம் ட்ரோன்களையும், அவற்றிற்கு எதிரான ஜாமர்களையும் தயாரிக்கிறது.

ட்ரோன் துறையின் பல்வேறு துறைகள் தொடர்பான உபகரணங்களை டிஜிட்டல் ஈகிள் தயாரிக்கிறது. வயல்களுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கும் ட்ரோன்கள், பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் ட்ரோன்கள், ட்ரோன் கமராக்கள், ட்ரோன் துப்பாக்கிகள் மற்றும் ட்ரோன் ஜாமர்கள், வெப்ப உணர்திறன் கொண்ட கமராக்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை அவை தயாரிக்கின்றன.

தற்போது டிஜிட்டல் ஈகிள் நிறுவனத்திடமிருந்து இலங்கை இராணுவம் கொள்வனவு செய்த ட்ரோன் ஜாமர்களில், ஒன்றின் விலை சுமார் இரண்டு மில்லியன் ரூபா.

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவை குறித்து இந்த வாரம் நடத்தப்பட்ட நிகழ்வுகளில் ட்ரோன் ஜாமருடன் இலங்கை படையினர் நிற்கும் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகியது.

இந்தியாவின் மகாராஷ்டிராவின் புனேவை தளமாகக் கொண்ட கம்ப்யூட்டர் பிளானட்டில் இருந்தும் ட்ரோன் ஜாமர்களும் கிடைக்கின்றன. ஆறு கிலோகிராம் எடையுள்ள இந்த சாதனம் 1,500 மீட்டர் தொலைவில் ட்ரோன்களை நிறுத்தும் வல்லமை கொண்டது.

ட்ரோன் ஜாம்மர் ஒரு சிறிய துப்பாக்கி போன்ற சாதனம். சீனாவில் டிஜிட்டல் ஈகிள் தயாரிக்கும் ட்ரோன் ஜாமரின் எடை நான்கு கிலோகிராம். இது லித்தியம் பட்டரி மூலம் இயக்கப்படுகிறது. 1,500 மீட்டர் தொலைவில் ஒரு ட்ரோனை நிறுத்தும் சக்தி கொண்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முல்லைத்தீவில் வினோதமான திருட்டு

east tamil

UPDATE: ‘மாமா பணத்தை தராததால் மாணவியை கடத்தினேன்’: மச்சான் கூறிய காரணம்!

Pagetamil

ரோஹிங்கிய முஸ்லிம் தொடர்பில் மீள குற்றப்புலனாய்வு விசாரணை

east tamil

தமிழ் மக்களின் போர்க்கால வாழ்க்கையை ஆவணமாக்கியவர் காலமானார்!

Pagetamil

கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மீட்பு: கடத்திய மச்சானும் கைது!

Pagetamil

Leave a Comment