வெள்ளவத்தை விபத்தில் மேலுமொருவர் பலி!

Date:

வெள்ளத்தையில் இன்று (6) காலை மதுபோதை நபர் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஒருவரே உயிரிழந்தார்.

இதன்மூலம், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.

வெள்ளவத்தை ராஜசிங்க மாவத்தையின் அருகே, இரவு விடுதியிலிருந்து மதுபோதையில் வாகனத்தை செலுத்தி வந்த ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதியதுடன், தொடர்ந்து பயணித்து நடந்த சென்று கொண்டிருந்தவர்களையும் மோதினார்.

இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் 57 மற்றும் 77 வயதுடைய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

வாகனத்தில் மதுபோதையில் பயணித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழில். இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில்...

நாவிதன்வெளியில் வர்த்தகர்களுக்கான விசேட நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாவிதன்வெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில், பிரதேசத்திலுள்ள வர்த்தகர்களுக்கான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்