73 வயதான வயோதிப் பெண்ணின் கைகால்களைக் கட்டி வைத்துவிட்டு, 12 வயது சகோதரனின் முன்னிலையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவமொன்று விலச்சிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சந்தேக நபர் 40 வயதுடைய திருமணமானவர்.
கடந்த 4ஆம் திகதி வயதான பெண்ணின் வீட்டிற்கு சென்ற சந்தேகநபர், அவரது கால்களையும் கைகளையும் கட்டியுள்ளார். பின்னர் 13 வயது சிறுமியையும், அவரது 12 வயது சகோதரரையும் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, கதவை மூடி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சிறுவனின் முன்னிலையிலேயே சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.
வயோதிபப்பெண்ணின் மகளை திருமணம் முடித்தவரே இந்த கொடூரத்தில் ஈடுபட்டார்.
சிறுமியும், மூதாட்டியும் இது குறித்து விலாச்சிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.