டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் தலையை தேடி பொலிசார் தொடர்ந்து தேடுதல் நடத்தி வருகிறார்கள். கொலை சந்தேகநபரான உபபொலிஸ் பரிசோதகர் தனது வீட்டின் பின்புறம், சூட்கேஸ் ஒன்றை தீமூட்டிய தடயங்களையும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
சிறுமியின் தலையும் எரிக்கப்பட்டதா என்பதை பொலிசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதேவேளை, சந்தேகநபரின் வீட்டை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் யுவதியின் தலையை தேடி நேற்று தேடுதல் நடத்தப்பட்டது.
விசாரணையின் படி, சந்தேகநபர் யுவதியின் சடலத்தை டாம் வீதி பகுதியில் விட்டுவிட்டு, உடைகளை மாற்றிக்கொண்டு, 1 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் புறக்கோட்டையிலிருந்து மொனராகலைக்குச் செல்லும் பேருந்தில் ஏறினார்.
அவர் பயணித்த பேருந்து இரத்னபுரி வீதியில் மொனராகலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பெல்மடுல்ல பகுதியில் உள்ள ஒரு கடையில் சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட்டது.
அந்த கடையை அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதலிலும், தலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அன்று இரவு 11.45 மணியளவில் பஸ் புத்தலவுக்கு வந்துள்ளது, சந்தேக நபர் அதிலிருந்து இறங்கினார்.
சந்தேக நபர் ஒரு நண்பருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவருடன் மோட்டார் சைக்கிளில் 9 கி.மீ தூரத்தில் உள்ள படல்கும்புரவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார்.
சந்தேக நபர் வீட்டிற்குச் சென்றபோது, அவரது மூத்த மகள் கதவைத் திறந்தார். பின்னர், அவர் உடல் கழுவ குளியலறையில் சென்றபோது, அவரது மனைவி மற்றும் மகள் அவர் கொண்டு வந்த சூட்கேஸை சரிபார்த்தனர்.
அந்த நேரத்தில் பையில் ஒரு மொபைல் போன், பல சார்ஜர்கள் மற்றும் ஒரு பெரிய வெற்று சூட்கேஸ் இருந்ததாக சந்தேக நபரின் மனைவி பொலிசாரிடம் தெரிவித்திருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு உப பொலிஸ் பரிசோதகரின் சகோதரியும் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சந்தேகநபர் தற்கொலை செய்த இடத்திற்கு அருகிலேயே அவரும் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.
சந்தேகநபரின் இல்லத்திற்கு அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் யுவதியின் தலை போடப்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் நேற்று மாலை தேடுதல் நடத்தப்பட்டது.