வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
புளியங்குளம் விசேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) இரவு 10.30 மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது வவுனியா பாலமோட்டை வயல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற இளைஞனிடம் சோதனை மேற்கொண்ட போது குறித்த இளைஞனிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கியையும் (இடியன் துப்பாக்கி) இளைஞனையும் கைது செய்த விசேட அதிரடி படையினர் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளைஞன் பாலமோட்டை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஓமந்தை பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1