காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து இடமாற்றப்படாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு காணி அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம்nகலந்துரையாடப்பட்டது.
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காரியாலயத்தினை அநுராதபுரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்வது பிரதேச மக்களுக்கு தேவையற்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும் எனவும் ஒருங்கிணைப்புக் குழுவில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் காணி அமைச்சருடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்றொழில் அமைச்சர், குறித்த காரியாலயம் மாற்றப்படுவதால் மக்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்களையும் மக்களின் உணர்வுகளையும் ஏற்றுக்கொண்ட காணி அமைச்சர் சந்திரசேன, குறித்த காணி சீர்திருத்த ஆணைக்குழு காரியாலயம் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்திலேயே செயற்படும் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது