26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

திருக்கேதீச்சரத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவதை தவிர்க்கவும்!

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி நிகழ்வுகள் இடம் பெற உள்ளதோடு, ஒரே நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு அடியவர்கள் தரிசனத்தை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி கருணாநந்த குருக்கள் தெரிவித்தார்.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி நிகழ்வுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இன்று (5) வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் இவ்வருடத்திற்கான மஹா சிவராத்திரி நிகழ்வுகள் எதிர் வரும் 11 ஆம் திகதி இடம் பெற உள்ள நிலையில், முன் ஏற்பாடுகள் தொடர்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள், இராணுவம்,பொலிஸ் உயர் அதிகாரிகள், மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினர், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது சிவராத்திரி நிகழ்வின் போது பின்பற்ற வேண்டிய பல்வேறு விடைங்கள் , நடை முறைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

அதற்கு அமைவாக வெளி மாவட்டங்களில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகை தர உள்ள அடியவர்கள் வருகை தருவதை இயன்ற அளவிற்கு குறைத்து உங்கள் வீடுகளிலும்,அயலில் உள்ள ஆலயங்களுக்கு சென்று சிவராத்திரி தின நிகழ்வுகளையும், விரதங்களையும் அனுஸ்டிக்குமாறு வேண்டுகின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் இருந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வருகின்ற அடியவர்கள் ஏ-32 பிரதான பாதையூடாக ஆலய வீதி ஊடாக ஆலயத்தினுள் ஒரு வழிப் பாதையூடாக சுகாதார நடைமுறைகளை பின் பற்றி வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியும்.

ஒரே நேரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு அடியவர்கள் தரிசனத்தை தரிசிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே அடுத்து வருகின்ற அடியவர்களுக்கு தரிசனத்தை தரிசிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.

எனவே அனைவரும் நான்கு ஜாம பூசையில் கலந்து கொள்வதை இயன்ற அளவிற்கு தவிர்த்து நீங்களாகவே ஒவ்வொரு பூசைகளிலும் தரிசித்த பின்பு வெளியேற வேண்டும்.

சுகாதார நடை முறை காரணமாக பாலாவியில் இருந்து தீர்த்த காவடி எடுக்கின்ற நடை முறை முற்று முழுதான நிறுத்தப்பட்டுள்ளதுடன், நான்கு ஜாம பூஜைகளுடன் அன்றைய தினத்திலும்,சிவாச் சாரியர்களினால் தீர்த்தக் காவடி மகாளிங்க பெருமானுக்கு நடாத்தப்படும்.

இங்கு வருகின்றவர்கள் மகாளிங்க பெருமானை தரிசித்து வேண்டுதல்களை முன் வைக்கலாம். அனைவரும் சுகாதார நடைமுறைகளை கடை பிடித்து அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ அனைவரும் பிரார்த்தித்து உலகில் இருந்து விரைவில் கொடிய வகை நோய் இல்லாது ஒழிய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலின் போது போக்குவரத்து, சுகாதாரம், மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடைங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment