இலங்கையின் முதல் இயற்கை திரவ எரிவாயு மின் நிலையத்தின் கட்டுமானம் இன்று (5) ஆரம்பிக்கப்படவுள்ளது.
கெரவலபிட்டியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக, தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோல்ட் மின்சாரம் வழங்கப்படும்.
நாட்டின் மின் நிலையமொன்றில் நிறுவப்பட்ட மிகவும் செயல்திறன்மிக்க எஃப் வகுப்பு எரிவாயு விசையாழி கெரவலபிட்டி ஆலையில் நிறுவப்படும் என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையம் இரட்டை சுழற்சி மின் நிலையமாகும், இது இரண்டு கட்டங்களாக நிறைவடையும்.
முதல் கட்டம் எரிவாயு விசையாழி நிறுவுவது, 220 மெகாவோல்ட் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும். இது 21 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு .
இரண்டாம் கட்டம் ஒரு நீராவி விசையாழி வழியாக தேசிய கட்டமைப்பிற்கு மேலும் 130 மெகாவோல்ட் இணைக்கப்படும். இது 12 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.