முக்கியச் செய்திகள்

இரணைதீவு மக்கள் 3வது நாளாகவும் போராட்டம்!

கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (5) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இன்று வெள்ளிக்கிழமை (5) இரணை தீவு பகுதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணை தீவு பிரதான இறங்குதுறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகியவற்றில் மக்கள் இன்றும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினருக்கு இரணை தீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இதுவரை சடலங்களை அடக்கம் செய்வதற்கான மாற்று இடம் தெரிவு செய்யப்படவோ அல்லது இரணைதீவு பகுதியிலே மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படவில்லை என இரணைதீவு மக்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மலையக தோட்டங்கள் இராணுவத்திடம்: அனுமதிக்க மாட்டோம் என்கிறார் இராதாகிருஸ்ணன்!

Pagetamil

இலங்கையில் புதிய டெல்டா பிறழ்வு அடையாளம் காணப்பட்டது: வடக்கிலும் பரவுகிறது!

Pagetamil

இலங்கையர் பிரியந்தகுமார கொலை வழக்கு: 6 பேருக்கு மரணதண்டனை; 9 பேருக்கு ஆயுள்; மேலும் 74 பேருக்கு சிறை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!