7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நியூசிலாந்து கடற்கரையை உலுக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து அருகே வடக்கு தீவின் கரையோரத்தில் நேற்று மாலை 7.3 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பூகம்பத்தின் மையப்பகுதி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து கிழக்கே 414 கி.மீ தூரத்தில் இருந்தது. கடற்மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் பூகம்பம் மாலை 6:57 மணிக்கு தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு அருகில் நீண்ட அல்லது வலுவான நடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்த நியூசிலாந்து மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இது நிலநடுக்கம் தொடர்பான சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Anyone near the coast who felt a LONG or STRONG quake should MOVE IMMEDIATELY to the nearest high ground, or as far inland as you can #EQNZ
— National Emergency Management Agency (@NZcivildefence) March 4, 2021