29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

காணி ஆவணங்களை வடக்கிற்கு வெளியே கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலையில் ஆரம்பமாகிய குறித்த போராட்ட பிற்பகல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இறுதியில் குறித்த விடயம் தொடர்பான மகஜர் ஒன்றினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளித்துள்ளனர்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கும் சென்று மகஜர் ஒன்றினை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment