தற்போது அனுராதபுரம் மாவட்ட மக்களிடையே பூஞ்சை (Tinea fungal) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி வைத்தியர் ஹேமா வீரக்கோன் இதனை தெரிவித்தார்.
இது ஒரு பொதுவான தோல் நோய் என்றாலும், தவறான சிகிச்சை முறைகளால் அண்மைக் காலத்தில் தவறான சிகிச்சை முறைகளால் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக எச்சரித்தார்.
தோலில் ஏற்படும் வட்ட வடிவ அடையாளங்களே இந்த நோய். தோலில் அரிப்பு ஏற்படும். முறையான சிகிச்சையின் மூலம் ஓரிரு நாளில் இதனை குணப்படுத்தலாம். எனினும், அநுராதபுரம் பகுதியில் பலர் முறையற்ற சிகிச்சைகளை பெறவதே நோயை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணமாக குறிப்பிடப்படலாம்.
அதனால், மக்கள் தாமாக மருந்துகளை வாங்காமல் வைத்தியசாலைகளை அணுகி, மருந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.