26 C
Jaffna
November 30, 2023
முக்கியச் செய்திகள்

இறந்த உடல்களை இரணைதீவில் புதைப்பதற்கு எதிராக போராட்டம்: இரணைதீவுக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை!

கிளிநொச்சி இரணை தீவு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக இறந்த உடல்களை புதைப்பதற்கு அரசங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து இன்றைய தினம் புதன் கிழமை காலை 9 மணியளவில் இரணை மாதா நகர் பகுதியின் பங்குதந்தை மடுத்தீன் பத்தினாதர் அடிகளார் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது.

குறித்த போராட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கோட்ட முதல்வர், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் மெசிடோ நிறுவனத்தினர், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினர், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு அரசாங்கத்தின் தீர்மனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததுடன் அரசாங்கத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரும் வாசிக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் பின்னர் இரணை மாதா நகர் பகுதியில் இருந்து படகு மூலம் இரணை தீவுக்கு பொது மக்கள் மற்றும் ஊடகவிலாளர்கள் செல்ல முயன்ற போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து போராட்ட குழுவினரால் பூநகரி பிரதேச செயலாளர், யாழ் மறைமாவட்ட ஆயர், யாழ் மனித உரிமை ஆணைகுழு காரியாலங்களுக்குரிய மகஜர் நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

தரவை துயிலுமில்ல ஏற்பாட்டுக்குழுவினர் 4 பேர் கைது

Pagetamil

விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை பதவிநீக்கிய ரணில்!

Pagetamil

எனது உயிருக்கு ஏதும் நிகழ்ந்தால் ரணிலும், சாகலவுமே பொறுப்பு: விளையாட்டு அமைச்சர்!

Pagetamil

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதுவரை 35 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!