ஒற்றைக் கண் சிமிட்டலால் மலையாள சினிமாவையும் கடந்து உலகையே கட்டிப் போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
2018ம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாள திரைப்படம்தான் பிரியா வாரியரின் முதல் படம். அதில் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் அவர் கண்ணை சிமிட்டிய சிமிட்டலில் மொத்த உலகமும் கவிழ்ந்தது.
அதை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
பிரியா வாரியர் தற்போது நிதின் உடன் ‘செக்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் போது ஓடிவந்து நடிகர் நிதினின் முதுகில் ஏறுவதற்கு பதிலாக தவறி கீழே விழுந்துள்ளார் பிரியா வாரியர்.
உடனே அங்கிருந்த நபர்கள் ஓடி வந்து பிரியாவுக்கு உதவினர். தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறி கீழே விழுந்த வீடியோவை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் பணியாற்றுமாறு பிரியாவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
வீடியோவை பார்க்க இங்கு அழுத்துங்கள்