பழுக்காத மாம்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் பானத்தில் ஏராளமான நன்மைகள் காணப்படுகிறது. கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் ஒன்று தர்பூசணி மற்றொன்று மாம்பழம். ஏனெனில் இவையிரண்டுமே சீசன் பழவகை ஆகும்.
அதிலும் மாம்பழம் என்பது இக்காலகட்டத்தில் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. அதனால் தான் மக்களும் மாம்பழ ஜூஸ் இவற்றை நாடுவதுண்டு. இவை இயற்கையாகவே சுவையான சத்து நிறைந்த பானமாகும். இந்த மாம்பழ ஜூஸை பொருத்த வரை உங்க உடலுக்கு தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது.
மாம்பழத்தில் விட்டமின் சி, பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், இரும்புச் சத்து என அனைத்து வகை ஊட்டச்சத்துக்களும் காணப்படுகிறது இந்த மாம்பழ ஜூஸை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள், இரத்த கோளாறுகள், சரும தரம் மேம்படுதல், கண் ஆரோக்கியம் என பலவித நன்மைகளை அளிக்கிறது. இது மன அழுத்தம், நீர்ச்சத்துயின்மை மற்றும் வயிற்று போக்கு போன்ற பலவித பிரச்சினைகளை போக்கக்கூடும்.
எனவே மாம்பழத்தை சாப்பிடுவதும் நல்லது ஆனால் அனைவரும் பானமாக குடிக்கதான் விரும்புவார்கள்.ஆகவே நல்லா உணவுகளை உண்ணுதல் அவசியம் ஆகும்