தமிழீழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஈடுபட்டு வருவதாக, அந்த கட்சியின் தலைமைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
நேற்று (28) வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் நடந்த போது, இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இது குறித்து நேற்று தலைமைக்குழுவில் உறுப்பினர்கள் கருத்து வெளியிடும்போது,
ரெலோவினால் நாடாளுமன்ற அங்கத்துவம் வழங்கப்பட்ட கோடீஸ்வரனை இலங்கை தமிழ் அரசு கட்சி தனக்குள் கழற்றி எடுத்தது. அது குறித்து கேட்டபோது, கோடீஸ்வரனின் குடும்பம் பரம்பரை தமிழ் அரசு கட்சியினர் என மாவை சேனாதிராசா பொறுப்பில்லாமல் பதில் சொன்னார்.
ஆனால், பின்னர் அவர் தோல்வியடைந்த பின்னர் தமிழ் அரசு கட்சி கண்டுகொள்ளவில்லை. அவருக்கு தேசியப்பட்டியலும் வழங்கவில்லை. அவர்களிற்கு பதவியில் உள்ளவர்கள்தான் வேணும்.
இப்பொழுதும் ரெலோவின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் சிலரை தன்னுடன் மாவை சேனாதிராசா வைத்துள்ளார். மாவை சேனாதிராசாவுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்கள் சிலரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, வரும் திங்கள்கிழமை அவர்களை அழைத்து விளக்கம் கேட்பதென முடிவாகியுள்ளது.