பாடசாலை மாணவியை கஞ்சா போதைப்பொருளுக்கு அடிமையாக்கி, விபச்சார வலையமைப்பிற்குள் இழுத்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அண்மையில் நடந்த இந்த சம்பவத்தை பற்றி மேலும் தெரிய வருகையில்.
மாத்தறையை சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் நிலையான தொழிலின்றி சிரமப்பட்டு வந்த போது, அவருக்கு கொழும்பிலுள்ள சிலருடன் தொடர்பு ஏற்பட்டது.
கொழும்பில் இயங்கும் விபச்சார வலையமைப்புடன் தொடர்புடைய அவர்கள், மாத்தறை வாசி யாராவது யுவதிகளை அறிமுகம் செய்து வைத்தால் பணம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
பணத்திற்காக, யுவதிகளை அந்த விபச்சார லையமைப்பில் சேர்க்க தீவிரமாக முயன்ற மாத்தறை நபர், 15 வயதான பாடசாலை சிறுமியொருவருடன் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த அறிமுகத்தை படிப்படியாக வளர்த்து, சிறுமிக்கு கஞ்சா கலந்த சிகரெட்டை புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மெதுமெதுவாக, அந்த பழக்கத்திற்கு அடிமையான சிறுமி, நாளாடைவில் கஞ்சா இல்லாமல் இருக்க மாட்டேன் என்ற நிலைமையை அடைந்துள்ளார்.
எனினும், கஞ்சாவிற்காக பணம் செலவிடும் நிலைமையும் மாணவியிடம் இருக்கவில்லை.
இதன்போது, கொழும்பிற்கு சென்றால் பெரும் தொகை பணம் சம்பாதிக்கலாம், அ்ங்கு உன்னை கவனித்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என மாத்தறை தரகர் மாணவியை மயக்கியுள்ளார்.
15 வயதான மாணவி அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு கஞ்சா கலந்த சிகரெட்டை வழங்கி, அவர் புகைபிடிக்கும் போது மாத்தறை நபர் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் கொழும்பிலுள்ள விபச்சார வலையமைப்புடன் தொடர்புடைய ஒருவருக்கு அந்த வீடியோவை அனுப்பி, சிறுமியயை அழைத்து வரவா என வினவியுள்ளார்.
கொழும்பு நபர் வீடியோவை பார்த்து, சிறுமியை அழைத்து வர கூறினார். அவர் அந்த வீடியோவை அலட்சியமாக நண்பர்களுடன் பகிர, அது மிக அண்மில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தகவல் மாத்தறை சிறுவர், பெண்கள் பிரிவிற்கு கிடைத்ததையடுத்து, துரித விசாரணை மேற்கொண்டு சந்தேகநபர்களை கைது செய்ததுடன், கொழும்பில் வைத்து சிறுமியை மீட்டனர்.
கொரோனா தொற்றின் பின்னர் இணைய பாவனை அதிகரித்துள்ள நிலையில், விபச்சார வலையமைப்புக்களும் அந்த திசையில் திரும்பியுள்ளன. மாணவர்களிற்கு ஸ்மார்ட் தொலைபேசி பரிச்சயம் அதிகரித்துள்ள நிலையில், விசமிகளில் வலையில் அவர்கள் விழாமல் கவனித்துக் கொள்வது பெற்றோரின் முக்கிய பொறுப்பாகும்.