தடுப்பூசி திட்டத்திற்குள் தலையீடு உள்ளது!

Date:

கொரோனா தடுப்பூசி திட்டம் தொடர்பான வழிபாட்டல் ஒரு குறிப்பிட்ட குழுவின் தலையீட்டால் திருத்தப்பட்டுள்ளன என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வைத்திர் பிரசாத் கொலம்பகே, இன்று கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். இந்த தலையீட்டினாலேயே தடுப்பூசி திட்டத்தில் பல கவலைகள் எழுந்துள்ளன என்றார்.

தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தொடங்குவதற்கு முன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சில திட்டங்களையும் முன்மொழிந்ததாக குறிப்பிட்டார்.

தடுப்பூசி செலுத்தும் திட்டம் பற்றி அமைச்சர், பிரதியமைச்சர், தொடர்புடைய தரப்புக்கள், வல்லுனர்கள் இணைந்து விவாதித்தனர்.  இதனடிப்படையில் தடுப்பூசி திட்டத்தை செயல்ப்படுத்த ஒரு கொள்கை முடிவு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தற்போது முடிவுகளை கடைபிடிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

பல்வேறு தரப்புக்கள் இதில் செல்வாக்கு செலுத்தி வரும் நிலையில், தடுப்பூசி இயக்கம் தனது கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்றிற்குள்ளானவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த கவலைகளிற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிற்கு எந்தவிதமான அரசியல் உறவுகளும் இல்லை என்றும், எந்தவொரு தேவையற்ற செல்வாக்குமின்றி விஞ்ஞான சான்றுகளின் அடிப்படையில் முடிவுகளை எட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முடிவுகளை எட்டும்போது நாட்டின் நிலைமை, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கொலம்பகே கூறினார். மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அதிக காலத்திற்கு மருத்துவமனையில் வைத்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்