முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் பிறந்து வளர்ந்து பல்கலைக்கழகத்திற்க தெரிவாகி ஊடகத்துறையில் பட்டம் பெற்ற யேசுரட்ணம் சிறி என்ற மாணவனுக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், விநோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று மாணவனின் திறமைக்கு மதிப்பளித்துள்ளார்கள்.
முள்ளிவாய்கக்காலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி ஊடகத்துறையில் கற்கை நெறியினை முடித்து கடந்த 25 ஆம் திகதி பட்டம் பெற்ற மாணவன் சகலதுறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவன் என துரைராஜா விருதிற்காக தெரிவு செய்யப்பட்ட போதும் அதற்கான விருது பல்கலை நிர்வாகத்தினால் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில்குறித்த மாணவன் பட்டம் பெற்று வீடு திரும்பிய போது கிராமத்தில் மக்கள் அமோக வரவேற்பினை கொடுத்துள்ளார்கள்.நெய்தல் கிராமிய மீனவ அமைப்புக்களாலும் மக்களாலும் வரவேற்பளிக்கப்பட்டது
இதனைதொடர்ந்து கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதேச சபை உறுப்பினர்களான க.ஜனமேஜயந்,எஸ்.கஜன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்டவர்கள் வீட்டிற்கு சென்று சாதனை படைத்த மாணவனின் பெற்றோர்களுடன் கலந்துரையாடி மாணவனை மதிப்பளித்துள்ளார்கள்.
இந்த மாணவனை போன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பல கல்வியாளர்கள் சாதனையாளர்கள் உருவாக வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.