வடக்கில் இன்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 51 பேர் யாழ்ப்பாண சிறைச்சாலை கைதிகளாவர்.
இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வவுகூடத்தில் 387 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
அதில் 10 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 4 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், வேலங்குளம் தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், ஒமேகா நிறுவனத்தில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 236 பேரின் பிசிஆர் மாதிரிகள் ஆய்வுசெய்யப்பட்டன. இதில் 52 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 51 பேரும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.