தென்னிந்திய அனில் கபூர் என அழைக்கப்பட்ட ராம்கியின் குடும்ப வாழ்க்கைக்குள் வில்லியாக ராதிக புகுந்து விளையாடியபற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ராம்கி. அந்த படத்தின் பின்னர் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. இளைஞர்கள்ளை வசீகரம் செய்து வைத்திருந்தார் ராம்கி.
அது ராம்கியின் பொற்காலம். இளம் வயதினரை கவர்ந்திருந்தார். நன்றாக நடிக்கவும் செய்தார்.
அப்போது, தென்னிந்தியாவின் அனில் கபூர் என்று அவரை அழைத்தனர்.
இவரது நடிப்பில் வெளியான செந்தூரப்பூவே படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இணைந்த கைகள் போன்ற படங்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுன.
ராம்கி, அப்போது புகழ்பெற்ற நடிகையாக இருந்த நிரோஷாவையே காதலித்து திருமணம் செய்திருந்தார். அந்த நட்சத்திர ஜோடி இப்போது வரை சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஆனால் ஆரம்பத்தில் இவர்களது திருமணத்திற்கு நிரோஷாவின் குடும்பத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செந்தூரப்பூவே சூட்டிங் ஸ்பொட்டில் இரண்டு ரயில்களுக்கு இடையே மாட்டிக் கொண்டுள்ளார் நிரோஷா. அப்போது ராம்கி தைரியமாக நிரோஷா காப்பாற்றியுள்ளார். அதன் பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டதாம்.
ராம்கி-நிரோஷாவின் காதலில் மெயின் வில்லன் ராதாரவி. வில்லி ராதிகா. இருவரும் திருமணத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
நிரோஷாவின் கூடப்பிறந்த சகோதரி ராதிகா. தந்தை எம்.ஆர்.ராதாவின் முதல் மனைவிக்கு பிறந்தவர் ராதாரவி.
“நம்முடைய குடும்ப தகுதிக்கு நீ அவரை திருமணம் செய்யக்கூடாது“ என நிரோஷாவை டாச்சர் செய்துள்ளனர். அப்போது, இணைந்த கைகள் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கவிருந்த நிலையில், அவர்களின் தலையிட்டு, ராம்கிக்கு பதிலாக அருண் பாண்டியனுக்கு ஜோடியாக நிரோஷாவை நடிக்க வைத்துள்ளனர்.
பின்பு ஒரு சில மாதங்கள் நிரோஷாவை வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளனர்.
ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நிரோஷா ராம்கி தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.
பின்பு கல்யாண ஏற்பாடு நடைபெற்றும் இரு வீட்டார் சண்டை காரணமாக நின்று உள்ளது.
காதலில் எதிர்ப்புகள் இருந்தாலும் கல்யாணம் வரை ராம்கி மற்றும் நிரோஷா லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்துள்ளனர்.
சில வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் வீட்டில் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.