இலங்கையில் தயாரிக்கப்பட்ட வைரஸ்களை அழிக்கும் புதிய முகக்கவசங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
பேராதெனிய பல்கலைக்கழக நிபுணர்கள் மேற்கொண்ட நீண்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்து, COVID-19 உள்ளிட்ட வைரஸ்களை அழிக்கும் புதிய முகக்கவசம் தயாரிக்கப்பட்டது. அது இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை மூத்த பேராசிரியர் காமினி ராஜபக்ஷ இது பற்றி விளக்கமளிக்கையில்,
முகக்கவசம் மூன்று அடுக்குகளால் ஆனது. உலகில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட முகக்கவசம் இதுவாகும்.
முதல் அடுக்கு உமிழ்நீர் போன்ற திரவங்களை அகற்றுவதற்காக தயாரிக்கப்படுகிறது, இரண்டாவது அடுக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு வேதிப்பொருள் வைரஸை அழிக்கிறது. மூன்றாவது அடுக்கு உமிழ்நீர் துளிகளை ஆவியாக்குவதற்கு செயல்படுகிறது.
முகக்கவசத்தை தொடர்ச்சியாக இருபத்தைந்து தடவைகள் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம் என்று கூறினார்.
பேராதெனிய பல்கலைகழகத்தின் அறிவியல் பீடம் மற்றும் மருத்துவ பீடம் ஆகியவற்றின் ஆய்வின்படி, முகக்வசத்தில் ஒட்டிக்கொள்ளும் 99% வைரஸ்கள் அழிக்கப்படுகின்றன என்பது உறுதியானதாக தெரிவித்தார்.