கசிப்புக் காய்ச்சுபவர்களை கைதுசெய்ய சென்ற சாவகச்சேரி மதுவரிநிலைய அதிகாரிகள் மீது நேற்று (24) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கெற்பேலி பகுதியில், சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சுவது தொடர்பில் சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு சென்ற அதிகாரிகள் மீது கசிப்பு காய்ச்சிய நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குததில் 3 மதுவரிநிலைய அதிகாரிகள் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அந்த பகுதியிலிருந்து 700 லீற்றர் கோடா, மற்றும் 6 லீற்றர் கசிப்பு, கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக சாவகச்சேரி மதுவரித்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1