முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன்!

Date:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முதல்வராக்குவோம் என்று அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

11 மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

பிற நிர்வாகிகள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்

அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவற்றில் முதன்மையானது, அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு, தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டெடுத்து தமிழகம் தலை நிமிர்ந்திடச் செய்வோம். தமிழர் வாழ்வு மலர்ந்திட தியாகத்தலைவி சசிகலா அவர்களின் நல்வாழ்த்துகளோடு செயல்படும் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை தமிழக முதல்வர் அரியணையில் அமரவைக்க அயராது உழைக்க சூளுரை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா சென்னை வீடு திரும்பிய நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஒருங்கிணைந்து பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்மூலம், அதிமுகவுடன் இணைந்து செயல்படுவதற்கு சசிகலா விருப்பம் தெரிவித்தார். ஆனால் அதிமுக தரப்பிலிருந்து, சசிகலாவை ஏற்றுக்கொள்வதில்லை என்று பல தலைவர்களும் தெரிவித்துவிட்டனர்.

இந்தநிலையில்தான், இன்னொரு பக்கம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி மூலமாக மூன்றாவது அணி அமைக்க முயற்சிகள் நடக்கின்றன.

சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொண்டால் அந்தப் பக்கமாக போவது, அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மூலமாக கூட்டணி அமைத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது அரசியல் வியூகமாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் சென்னையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கியமான சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, சசிகலா நல்லாசியுடன் டிடிவி தினகரனை முதல்வராக அயராது பாடுபட வேண்டும் என்று அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்றாவது அணி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில்தான் அமையப்போகிறது, தினகரன்தான் முதல்வர் வேட்பாளர் என்பது உறுதியாகி உள்ளது.

மற்றொரு தீர்மானத்தில், எல்லா சவால்களையும் எதிர்கொண்டு கழகத்தை சிறப்பாக நடத்திவரும் டிடிவி தினகரனுக்கு பாராட்டை தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.

spot_imgspot_img

More like this
Related

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்ததாக தகவல்

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில்...

இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க போராட்டம்

நாடாளாவியரீதியில் ஆசிரியர்கள் அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர்...

அந்தோனியார் ஆலயத்தில் முன்னாள் கல்விப்பணிப்பாளரின் சடலம்!

மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்