26.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
ஆன்மிகம்

சிவராத்திரி தோன்றக் காரணம்

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலை சிறந்தது சிவராத்திரி விரதம். `எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்’ – என்று சிவபெருமான் அருளியதாக வரதபண்டிதம் எனும் நூல் தெரிவிக்கிறது.

எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி, அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி… சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.

சிவராத்திரி தோன்றக் காரணம்

பிரம்மாவும் மகாவிஷ்ணுவும், சிவபெருமானின் முடி-அடி தேடிய வரலாறு நமக்குத் தெரியும். மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி தினத்தன்று. அந்த நாளே சிவராத்திரி என்கிறது ஸ்காந்த மஹாபுராணம்

மற்றோர் அற்புதமான கதையும் உண்டு. பிரளய காலம் முடிந்த அன்றைய இரவில், நான்கு ஜாமங்களிலும் சிவனாரை ஆகம முறைப்படி பூஜை செய்தாள் உமாதேவி.
பொழுது விடிந்தது. சிவனாரை வணங்கிய தேவியார் , ‘‘ஸ்வாமி! தங்களை நான் பூஜித்த இந்த இரவு சிவராத்திரி என வழங்கப்படவேண்டும். இந்தத் தினத்தில் சூரிய அஸ்தமனம் முதல், மறு நாள் காலை சூரிய உதயம் வரையிலும் தங்களை வணங்குவரடகளுக்கு சர்வ மங்கலங்களுடன் நிறைவில் முக்திப் பேறையும் அருள வேண்டும் என வேண்டினாள். பரமசிவனும், அப்படியே ஆகட்டும் என்று அருள்புரிந்தார். அம்பிகை பூசித்த அந்த நாளே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment