இன்று (24) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இளைஞர் ஒருவர் மோதி உயிரிழந்தார். மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.
மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தைச் சோந்த விக்கினேஸ்வரராஜா சதூசன் (26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு கருவப்பங்கேணி பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்ற இவர், அதிகாலை 4 மணியளவில் கொழும்பல் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற புகையிரதத்துடன் கருவப்பங்கேணி பிரதேசத்தில் மோதி படுகாயமடைந்தார். மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1