Pagetamil
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ, எம்.பி. ரிஷாத் பதியுதீன், முன்னாள் தேசிய புலனாய்வு சேவைகள் பணிப்பாளர் சிசிர மெண்டிஸ், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலந்த ஜெயவர்தன, முன்னாள் பொலிஸ்மா அதிபர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் மீது கிரிமினல் வழக்குத் தாக்கல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்த ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு நேற்று (23) சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 440 பேரின் சாட்சியங்களை பதிவு செய்த பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சில முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு.

தற்கொலை குண்டுதாரிகளின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

இறந்தவர்களுக்கு ரூ .2 மில்லியன் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ .500,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அவர் மே 09, 2015 அன்று மாவனெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான
முகமது தஸ்லிம் மேலதிக சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அரசு நிதி மற்றும் அவருக்கு தேவையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைதாரியை தடுத்து நிறுத்தி, உயிரிந்தவரின் குடும்பத்திற்கு அன்பளிப்பு

தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக ரிஷாத் பதியுதீன் மற்றும் ஆசாத் சாலி மேற்கொண்ட தலையீடுகள் குறித்து செய்யப்பட்ட பரிந்துரைகளில், இன வேறுபாட்டை ஏற்படுத்தும் ஒருவரை பிடியாணை இல்லாமல் கைது செய்வதற்கான ஏற்பாட்டை இது வலியுறுத்துகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்தல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கு விசாரணைக்கு சிறப்பு உயர்நீதிமன்றத்தை நிறுவவும், தினசரி விசாரணைகள் நடத்தவும், நீதிபதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.

இலங்கையில் இஸ்லாமிய அரசை ஸ்தாபிக்க சதி செய்த ரஷீத் அக்பர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சு எப்போதுமே ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டும் என்றும், அவர் வெளிநாடு சென்றால் ஜனாதிபதி ஒரு பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்ட தீவிரவாத மத பிரச்சாரகர்களின் வாழ்க்கைக் கதைகள் அல்லது புத்தகங்களை இந்த நாட்டில் எந்த நிறுவனமும் வெளியிடக்கூடாது.

பாதுகாப்பு அனுமதி இல்லாமல் எந்த வெளிநாட்டினரையும் இந்த நாட்டில் வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது.

மதராசா பாடசாலைகளுக்கான நிதியுதவியை நிறுத்துதல். அனைத்து மத பாடசாலைகளையும் ஒழுங்குபடுத்த வேண்டும். மதராசாக்கள் மற்றும் பௌத்த, கிறிஸ்தவ மற்றும் இந்து மத பாடசாலைகளையும் கட்டுப்படுத்த வேண்டும்.

மத விவகாரங்களுக்கு ஒரே ஒரு அமைச்சகம் மட்டுமே இருக்க வேண்டும். அது ஜனாதிபதியின் கீழ் இருக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படுவது பரிந்துரைக்கப்படுகிறது.

மொபைல் சிம்களை வழங்கும்போது ஒரு நபரிற்கு வழங்கப்படும் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல்.

அவசரகால நிலை அறிவிக்காமலேயே இராணுவத்தின் உதவியை பொலிசார் பெறக்கூடிய சட்ட கட்டமைப்பை உருவாக்குதல்.

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலை தடுக்க துணிச்சலுடன் செயற்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சமிந்த நிஹால் வீரசிங்க ஆணைக்குழுவால் பாராட்டப்பட்டார்.

பாடசாலைகளை பௌத்தம், கிறிஸ்தவம், இந்து அல்லது இஸ்லாமியம் என வகைப்படுத்தக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment