Pagetamil
முக்கியச் செய்திகள்

இன்னொரு மியான்மராகிறது; இலங்கை அனைத்து போர்க்குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கையெடுங்கள்: அமெரிக்க தூதரிடம் கேட்டது தமிழ் அரசு கட்சி!

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா ரெப்லிஸ்ற்றுக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று (24) காலை சந்திப்பு நடந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்திப்பு நடந்தது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா, கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை விவகாரம் தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்த முதலாவது அறிக்கைக்கும், தற்போது இணை அனுசரணை நாடுகள் சமர்ப்பித்துள்ள அறிக்கைக்குமிடையில் உள்ள வேறுபாடு குறித்து தமிழ் அரசு கட்சி பிரதிநிதிகள் கவலை தெரிவித்தனர்.

அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிட்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் காத்திரமான நடவடிக்கையெடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.

இலங்கையில் போர்க்குற்றமிழைத்தமை தொடர்பில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்க பயணத்தடை விதித்துள்ளது. இதேபோல ஏனைய போர்க்குற்றவாளிகள் மீதும் பயணத்தடை விதிக்க வேண்டும், தனது நட்பு நாடுகளையும் அந்த நடவடிக்கைக்கு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசு, சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலமைப்பை நிறைவேற்ற வாய்ப்பிருப்பதால், அமெரிக்கா இதில் கவனமாக இருந்த, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இலங்கையின் போக்கு இன்னொரு மியான்மராகிக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய இலங்கை தமிழ் அரசு கட்சியினர், அமெரிக்கா தலையிட்டு தமிழ் மக்களின் வாழ்வுரிமை, அரசியலுரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

அனைத்து விடயங்களையும் அவதானமாக கேட்ட அமெரிக்க தூதர், தமிழ் மக்கள் சமமான அரசியலுரிமையுடன் வாழ அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், தமது நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!