போலி பெண் வைத்தியரை கண்டி பொலிசார் கைது செய்துள்ளனர்.
கண்டி பொது வைத்தியசாலயில் கடமையாற்றுபவரை போல போலியான ஆவணமொன்றையும் அவர் வைத்திருந்துள்ளார்.
வைத்தியரை போல நடித்து, கண்டியில் வைத்திய நிலையமொன்றையும் நடத்தி வந்துள்ளார்.
கண்டி வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கண்டி பொலிசாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
கைதான 47 வயதான பெண் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்.