நெடுந்தீவில் காணாமல் போன மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்தனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டிருந்தது.
நேற்று (முன்தினம் 21) பகல் 1.45 மணியளவில் குறிகட்டுவானில் மீன் இறக்கி விட்டு, நெடுந்தீவுக்கு திரும்பியவர்களே காணாமல் போயினர்.
நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தை சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (20), நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த எஸ்.ரொபின்சன் (40) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் காணாமல் போனதையடுத்து, நடத்தப்பட்ட தேடுதலில் அவர்கள் பயணித்த படகு நெடுந்தீவு கரையில் மீட்கப்பட்டுள்ளது.
இன்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1