31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
இலங்கை

தினேஷ் இன்றிரவு உரை!

வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இன்று (23) இரவு உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (22) ஆரம்பமானது.

இன்று இரவு 8.52 மணிக்கு அமைச்சர் தினேஷ் குணவர்தன உரையாற்றுவார். மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை முன்னேற்றம், நல்லிணக்கம் குறித்து அவர் உரையாற்றுவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தயாரித்துள்ள அறிக்கை குறித்து நாளை (24) விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் தயாரித்துள்ள புதிய தீர்மானமும் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கனடா, ஜெர்மனி, மொன்டினிக்ரோ, வடக்கு மெசிடோனியா, மலாவி ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்முறை கூட்டத் தொடர் இணையவழியில் நடத்தப்படுகின்றது.

இதையும் படியுங்கள்

விபத்தில் ஒருவர் பலி

Pagetamil

தேர்தல் வாக்குறுதியின்படி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்: பிரதமர் ஹரிணி

Pagetamil

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!