கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உசன் பகுதியில் இன்று (23) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. கனரக வாகனத்தின் சாரதியும், நடத்துனரும் தெய்வாதீனமாக தப்பித்தனர்.
உழவு இயந்திரம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளை, தென்பகுதியில் இருந்து பொருட்களுடன் வந்துகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று தலைகீழாக கவிழ்ந்துள்ளது.
பாரிய விபத்தாக இடம்பெற்றிருந்த போதும் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
2
+1
+1
1
+1
2