Pagetamil
இலங்கை

வவுனியாவில் நேர்நிகர் வகுப்பறையை திறந்து வைத்த அமெரிக்க தூதர்!

இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலத்தில் மேம்படுத்தப்பட்ட நேர்நிகர் வகுப்பறை ஒன்றை ஆரம்பித்து வைத்தார்.

நேர்நிகர் வகுப்பறைகள் ஊடாக பல்வகை மாணவச் சமூகங்களிற்கிடையிலான பரஸ்பர உறவை வலுப்படுத்துவதனை நோக்கமாக்கொண்டு சர்வதேச அபிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் அமைப்பின் 21ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்பில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலம் மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் குறித்த நேர்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்பட்டது. அதனை உத்தியோகபூர்வமாக இன்றையதினம் அமெரிக்க தூதுவர் ஆரம்பித்துவைத்தார்.

நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், பாடசாலையின் அதிபர் திருமதி நந்தபாலன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வீட்டிற்குள் நுழைந்த திருடனை கண்ட மூதாட்டி; திருடன் எடுத்த கொடூர முடிவு: யாழில் நடந்த பயங்கரம்!

Pagetamil

வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் இடம்கொடுக்க கூடாது – சி.வி.கே.சிவஞானம்

Pagetamil

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றதே – முன்னாள் எம்பி சந்திரகுமார்

Pagetamil

Leave a Comment