26.4 C
Jaffna
December 14, 2024
Pagetamil
லைவ் ஸ்டைல்

வாழைக்காயில் சுவையான வறை

வாழைக்காயில் சிப்ஸ், பொரியல். வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான வறை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம்.

சூப்பரான வாழைக்காய் வறை
வாழைக்காய் வறை
தேவையான பொருட்கள

வாழைக்காய் – 2

வெங்காயம் -1.
இஞ்சி – 1 அங்குலம்
தேங்காய் துருவ – 1 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை – 5
பச்சைமிளகாய் – 1
மிளகுத்தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் – 2 மேஜைக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாழைக்காயை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து (தோல் நிறம் கருப்பாக மாறிவிடும்) எடுத்துக்கொள்ளவும், சூடு ஆறியபின் தோல் உரித்து உதிர்த்தோ, அல்லது துருவியோ வைத்துக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம்,பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வெந்ததும், கறிவேப்பிலை சேர்த்து உதிர்த்த வாழைக்காய் சேர்த்து உப்பு தூவி கிளறி விடவும்.

மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடம் மூடிவைத்து ஒன்றுசேர்ந்து வேகவிடவும்.

தண்ணீர் சேர்க்கவேண்டாம்.

இது வறுவலாக புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும்.

அடுப்பிலிருந்து இறக்கி வைப்பதிற்கு முன்பாக மிளகுத்தூள், துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும்.

தயிர் அல்லது ரசம் சாதத்துடன் வாழைக்காய் பொடிமாஸ் அசத்தல்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment