26.4 C
Jaffna
December 14, 2024
Pagetamil
தொழில்நுட்பம்

துவைக்கவே தேவையில்லை… தண்ணியில கண்டமுள்ளவர்களிற்காகவே தயாரிக்கப்பட்ட உள்ளாடை!

தண்ணீர் இல்லாமல், சுயமாக சுத்தம் செய்யவல்ல உள்ளாடையை, அமெரிக்காவின் மின்னசோட்டாவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது.

உள்ளாடை சுத்தம் ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானது. ஆனால், பலர் இதில் அக்கறை செலுத்துவதில்லை.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தை சேர்ந்த ஹெர்க்லயான் என்ற நிறுவனம், ஒரு நாள், ஒரு வாரம் மட்டுமல்ல பல மாதங்கள் ஆனாலும், துர்நாற்றம் அடிக்காத உலகின் சுத்தமான உள்ளாடையை, கிரிபி என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த பிரத்யேக உள்ளாடை, ஹெர்க்பைபர் எனப்படும் பைபரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பேப்ரிக்கில், மூங்கில், யூகலிப்டஸ், பீச்வுட், தாமிரம் போன்றவை உள்ளடக்கி உள்ளது. இந்த பேப்ரிக்கினால் தயாரிக்கப்பட்ட உள்ளாடை, நீண்ட காலங்கள் சுத்தமாகவும், புத்துணர்ச்சி உடனும் இருக்க உதவுகிறது.

கிரிபி உள்ளாடை, கெட்ட பாக்டீரியாக்களை தொடர்ந்து அழிக்கவல்லதால், இது துர்நாற்றத்தை வராதபடி பார்த்துக் கொள்கிறது.

இந்த உள்ளாடையை பயன்படுத்துபவர்கள், நாள்தோறும், சில மணிநேரங்கள், இந்த உள்ளாடையை காற்றுபடும்படி கட்டாயம் வைக்க வேண்டும். பின் மறுபடி அதை அணியும்போது அது புதிய உள்ளாடை போன்று மாறிவிடும் என்று இண்டிகோகோ தயாரிப்பு அட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த உள்ளாடை, 100 நாட்களுக்கு எவ்வித துர்நாற்றமும் இல்லாமல், புத்துணர்வுடன் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், இதற்கு முன்னதாக, சுயமாக சுத்தம் செய்துகொள்ளும் வகையிலான காலுறை, பெட்ஷீட்கள் மற்றும் டி-சேர்ட்களை வர்த்தகம் செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment